தற்போது திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது நடிகை நிலானியின் காதலன் லலித் காந்தியின் தற்கொலை பற்றி தான். இது குறித்து தொடர்ந்து போலீசார், நிலானி மற்றும் காந்தியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், காந்தியிடம் நிலானி கடைசியாக பேசிய ஒரு ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த ஆடியோவில், தான் பட்ட கஷ்டங்கள் குறித்து, விரிவாக பேசியுள்ளார் நிலானி. நிலானி சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு தேடிய போது காந்தியின் நட்பு அவருக்கு கிடைத்துள்ளது. நாளடைவில் நிலானியின் அழகில் மயங்கி காந்தி அவரை காதலிக்க துவங்கினார்.

ஆரம்பத்தில் காந்தியின் காதலை ஏற்றுக்கொண்ட நிலானி பின் அவருடைய முன் கோபம் பிடிக்காமல் மெல்ல மெல்ல விலக துவங்கினர்.

ஆனால் காந்தி தொடர்ந்து நிலானியை விடாமல், அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளுபடி காந்தி நிலானியை அணுகியபோது, இதற்கு நிலானி முன் கோபத்தை காரணம் காட்டி, அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். 

காந்தி தற்கொலை செய்து கொள்வேன் என நிலானியை சந்திக்க ஷூட்டிங் ஸ்பாட் சென்ற போது, நிலானி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். இதனால் போலீசார் காந்தியை விசாரித்துள்ளனர். 

இதுகுறித்தும் அந்த ஆடியோவில் பேசியுள்ளனர். மேலும் தன்னுடைய முன்னாள் கணவர் 'பாலா முருகனுடன்' வாழ்ந்த போதும், அப்பா இல்லாமல் கஷ்ட பட்ட போதும் கூட, தான் இந்த அளவிற்கு வேதனை பட்டது இல்லை என முதல் முறையாக தன்னுடைய கணவர் பெயரை வெளியிட்டுள்ளார் நிலானி.

அதே போல் நிலானிக்கு தேவைகள் இருந்த போது, லலித் காந்தி ஓடி வந்து உதவினார் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் தன்னுடைய தேவைகளுக்காக காந்தியுடன் பழகி விட்டு, அவருடைய முன் கோபத்தை சுட்டி காட்டி நிலானி விலகியதால், மன அழுத்தம் காரணமாக காந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பலர் விமர்சித்து வருகிறார்கள்.