*பிரபுதேவாவின் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த ‘தபாங் 3’ படம் செமத்தியாய் ஊத்திக் கொண்டது. தமிழில் அப்படத்தை டப் அடித்து வெளியிட சல்மான் செலவு செய்தது ரெண்டு கோடியாம். ஆனால் அதில் பத்து பர்சண்டேஜ்தான் வசூலே ஆச்சாம். இதனால் தமிழ் ஆடியன்ஸ் மீது கடும் கடுப்பில் இருக்கிறாராம் சல்மான். (அந்த படத்துல யோகிபாபு இருந்தாரா பாஸ்? அப்புறமென்ன?)

*2021 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பதினைந்து வருஷம் இருக்குது என்று நினைக்கிறார் போல ரஜினிகாந்த். தர்பாரோடு நடிப்பை ஏறக்கட்டிவிட்டு கட்சி துவக்குவார் என்றார்கள். ஆனால் இதோ சிவா இயக்கத்தில் ‘மன்னவன்’ போகுது. இப்படத்தின் பத்து சதவீத படப்பிடிப்பே நிறைவு பெற்றிருக்கும் நிலையில், அடுத்த படத்துக்கான பணியை துவக்கிவிட்டார் சூப்பர். ஆமாம் இந்தப் படத்தை தயாரிக்கப்போவது ரஜினியின் இரண்டாவது மகளின் கணவரான விசாகன். அவரும் இப்போது இயக்குநர்களை சந்தித்து கதை கேட்க துவங்கிட்டாராம். 
(அப்போ செளந்தர்யா ஆதினத்திடம் ஆசி வாங்கியது இதற்குத்தானா?)

*நடிகர் தனுஷ், தலித் மக்களின் வீரம் பேசும் கதைகளாக பார்த்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரது மேனேஜரான வினோத்தோ தன் ட்விட்டரில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை ‘குருமாவளவன்’ என குறிப்பிட்டுவிட்டார். பெரும் பிரச்னையாகிவிட்டது. அவர் ட்விட்டை நீக்கியபின்னும் விடாமல் ‘மன்னிப்பு கேளு’ என்று கும்முகிறார்கள் வி.சி.க்கள். 
இதில் பின்னணி தகவல் என்னவென்றால் இந்த வினோத்தும், திருமாவளவனோடு சமீபத்தில் மோதிய காயத்ரி ரகுராமும் செம்ம ஃப்ரெண்ட்ஸாம். (நட்புடா!ன்னு ஸீன் போட்டவரை செஞ்சுட்டாய்ங்க போல)

*கட்டாய வெற்றிக்காக உடல் கடுக்க காத்துக் கிடந்து நடிக்கிறார் சூர்யா. சமீபத்தில் வெளியான அவரது சூரரைப் போற்று படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. இதைப் பார்த்துவிட்டு ஷாரூக்கானே சூர்யாவுக்கு போன் போட்டு வாழ்த்தினாராம். அப்படியே அப்படத்தின் இசை இயக்குநர் ஜி.வி.பிரகாஷையும் அழைத்து வாழ்த்தியிருக்கிறார். (அப்ப சீயானை தூக்கிட்டு, ஷாரூவை போட்டு பாலா இயக்கத்துல பிதாமகன் -2 எடுக்கலாமா சூர்யா?)

*தளபதி விஜய் தனது அடுத்த படத்துக்கான கதையை, இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் பிரேக் நேரங்களில் கேட்கிறார். வரிசையாக பல இயக்குநர்கள் வந்து கதை சொல்லி செல்கிறார்கள்! என்று ஏஸியா நெட் தமிழ் இணையதளம்தான் முதலில் சொல்லியிருந்தது. தளபதிக்கு கதை சொல்லி இயக்குநர்களின் வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் ‘கோமாளி’ பட இயக்குநர் பிரதீப். கோமாளி படத்தில் காமெடியும் தூக்கல், கன்டண்ட்டும் இருந்ததை தளபதி அடிக்கோடிட்டு இருக்கிறாராம். 
ஆனால் முதல் படத்திலேயே ரஜினியை வம்புக்கிழுத்தவர் என்பது எக்ஸ்ட்ரா வெயிட்டேஜாம். 
(ஆக ரஜினியை வைத்து அடுத்த சர்ச்சை ரெடி)