which actress get more salary?
நடிகைகள்;
நடிகைகளை பொறுத்தவரை நடிகர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட இவர்களுக்கு குறைவாகத்தான் கொடுக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் ஒரு சில நடிகைகள் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கி வருகின்றனர்.
அதிக சம்பளம்:
நடிகைகளுக்கு உள்ள மார்க்கெட்டை வைத்து தான் அவர்களுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அது பாலிவுட், கோலிவுட், என எந்த திரையுலகமாக இருந்தாலும் சரி.
கோலிவுட்:
கோலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்குபவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் அதிக பட்சமான 5 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகை அனுஷ்கா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள்.
இவர்கள் அனைவரை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார் தீபிகா படுகோனே, இதுவரை பாலிவுட் திரையுலகில் நடிகை பிரியங்கா சோப்ரா தான் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையின் பட்டியலில் முதலில் இருந்தார்.

ஆனால் சமீபத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வெளியான, 'பத்மாவத்' திரைபடத்தின் மூலம் பிரியங்கா சோப்ராவின் சம்பளத்தையே முறியடித்துள்ளார் தீபிகா என பாலிவுட் திரையுலகில் கூறப்படுகிறது.

ஆனால் இதுவரை அவர் இந்த படத்திற்காக எத்தனை கோடி சம்பளமாக பெற்றார் என்கிற சரியான தகவல் வெளியாகவில்லை. மேலும் தயரிப்பலர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதத்தில் இனி இதுபோல் மிக பெரிய தொகையை கொடுத்தால் தான் கால் ஷீட் தரும் முடிவிலும் இருக்கிறாராம் தீபிகா.
