வெடித்தது  பிரச்சனை....! நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறாரா  கமல்..?!

பெப்சி யூனியன் பிரச்சனை அதிகரித்துள்ளதால்,அதன் கோரிக்கையை ஏற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவாரா நடிகர் கமல் என சந்தேகம் எழுந்துள்ளது பிக்பாஸ் சீசன்  2

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் பிரமாண்டமான செட் அமைத்து  நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 400 கும் மேற்பட்ட வேலையாட்கள் வேளையில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் தமிழகத்தில் இருந்து 41 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். அதில் தொகுப்பாளராக உள்ள  நடிகர் கமலும் ஒருவர் என்பது  குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நடக்கும் மிக பெரிய நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மிகவும் குறைவான எண்ணிகையில் பணியாட்களை எடுத்து உள்ளனர். அந்த 41 பேரும் பணிபுரிய மாட்டார்கள் என ஆர்கே செல்வமணி தெரிவித்து உள்ளார்

விலகுவாரா கமல்..?

41 பேரில் கமலும் ஒருவர் என்பதால், நிலைமையை புரிந்துக்கொண்டு அதற்கேற்றவாறு அவர் அந்த நிகழ்ச்சியில் பணிபுரிய மாட்டார் என  நம்பிக்கை தெரிவித்து உள்ளார் ஆர்கே செல்வமணி

இதே போன்று, பிக்பாஸ் சீசன் 1 லும், அதிக அளவில் வெளி மாநிலத்தவர்கள் தான் அதிகமாக பணி புரிந்தனர்.

பின்னர் இது குறித்து கமலிடம் தெரிவித்த பின், அதற்கான நடவடிக்கை எடுத்தார் கமல் பின்னர், 50 சதவீத தமிழக தொழிலாளர்களை பணி அமர்த்தினார் என்று ஆர்கே செல்வமணி தெரிவித்து உள்ளார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலின் அரசியல்

மக்கள் நீதி மய்யம் தொடங்கி உள்ள நடிகர் கமல், அவருடைய அரசியல் பயணத்தை தொடங்கவும், அரசியல் குறித்து முக்கிய கருத்தை தெரிவிக்கவும் மிக முக்கிய நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ்.

அதே சமயத்தில், சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் பெப்சி பிரச்சனை தீர்த்து வைப்பாரா.? அல்லது நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவாரா என்ற கேள்வி  எழுந்துள்ளது.

இதற்கான வாய்ப்பு சற்று குறைவு என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு நிற்காமல் செல்ல அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.