திருவண்ணாமலையை சேர்ந்த காந்தி லலித் என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னை கேகே நகரில் தீக்குளித்து இறந்தார். இவருடைய மரணத்திற்கு காரணம் நடிகை நிலனை என கூறப்படுகிறது.

நடிகை நிலானி. காந்தி லலித் தன்னை வற்புறுத்தி கல்யாணம் செய்துக்கொள்ள முயற்சி செய்கிறார் என்று கமிஷனர் அலுவலகம் சென்று புகார் தெரிவித்து இருந்தார். இந்லையில் காந்தி லலித் தூக்கிட்டு தீக்குளித்து  இறந்ததால், நிலானி மீது புகார் எழுந்துள்ளது. இது குறித்து நிலானிடன் கேட்ட போது, நான் காந்தி லலித் உடன் பழகியது உண்மை தான்....எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.. தனிமையில் இருப்பதால் எனக்கும் என் குழந்தைக்கும் ஆறுதலாக இருந்தார் எனவே அவரிடம் பழகினேன்...

ஒரு கட்டத்தில், என் பிள்ளைகளிடம் கோபமாக நடந்துக் கொண்டதை உணர்ந்தேன்..பிறகு அன்றே முடிவு எடுத்து விட்டேன். அவருடன் பழகுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று...திடீரென விலகினால்  சரியாக இருக்காது என்று கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கினேன்....ஆனால் பின்னர் கடைசியாக  படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து என்னிடம், காலில் மெட்டி போட வேண்டும் என கேட்டுக்கொண்டு  வற்புறுத்தினார். அதற்கு மேல் நான் தொந்தரவு செய்ய மாட்டேன் என கூறி இருந்தார்..இதை எல்லாம் வைத்துக்கொண்டு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததால் என்னை தவறாக பார்கிறார்கள்..அவருடைய  தற்கொலைக்கு நான் காரணம் இல்லை..இதற்கு முன்னதாக அவர் பல முறை தற்கொலை முயற்சி செய்து  இருக்கிறார்... 


  
காந்தி லலித் என்னை மட்டும் காதலிக்க வில்லை அவர் பல பெண்களிடம் பேசி பழகி உள்ளார். பண மோசடி செய்து உள்ளார். இவர் தற்கொலைக்கு நான் தான் காரணம் என கூறி பலரும், குன்றத்தூர் அபிராமியுடன் சேர்த்து வைத்து பேசுகின்றனர்...அவருடைய தற்கொலைக்கு நான் காரணம் இல்லை என  கூறி தேம்பி அழுகிறார் நிலானி.