அப்பாவாக போகும் நாக சைதன்யா; சமந்தாவுக்கு கொடுக்கும் அதிரடி ஷாக்!
Naga Chaitanya Sobhita Dhulipala First Baby : நாக சைதன்யா மற்றும் சோபிதா தம்பதி சமந்தாவுக்கு மட்டும் அல்லாமல் ரசிகர்களுக்கும் ஒரு குட் நியூஸ் சொல்ல தயாராகி வருகிறார்கள்.

அப்பாவாக போகும் நாக சைதன்யா
தெலுங்கு பிரபல நடிகரான நாக சைதன்யா பல தெலுங்கு படங்கள் மூலம் சினிமா வந்தார். அவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன். நாகை சைதன்யா 2017 ஆம் ஆண்டு சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணம் மிகப் பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. அதற்குப் பிறகு சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு சமந்தா தனியாகவே மன வேதனையுடன் வாழ்ந்து வந்தார். அதிலிருந்து மீண்டு வருவதற்கு பல வழிகளை கையாண்டார். அதில் ஒன்று தான் ஜிம் ஒர்க் அவுட். இப்போது சினிமாவில் பிஸியாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் ராஜ் நிடிமோருவை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.
நாக சைதன்யா சோபிதா துலிபாலா
எதிர்பாக்காத வகையில் நாக் சைதன்யா சோபிதாவை திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் இருவருக்கும் 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இருவரும் மணமக்களாக கோயிலுக்கு சென்று சாமி குடும்ப எல்லா போட்டோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவரும் வெளியிட்டு இருந்தனர்.
சோபிதா துலிபாலா:
சோபிதா படங்கள் மூலம் தமிழ் சினிமா உலகிற்கும் மற்றும் பிற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக அதிகளவில் பிரபலமானார். அவர் மீது காதல் கொண்ட நாக சைதன்யா அவரை திருமணம் செய்து கொண்டார். நாக சைதன்யாவுக்கும் சோபித்தாவுக்கும் திருமணம் ஆகி மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் தற்போது சோபிதா கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் தான் அப்பாவாக இருப்பதாகவும், இதைப் பற்றி அறிவிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சமந்தா கல்யாணம்:
தற்போது தான் சமந்தா ராஜ் நிடிமோரு ஆகிய இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து தற்போது திருமணம் செய்துள்ளனர். சமந்தா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் நாக சைதன்யாவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கும். ராஜ் நிடிமோருக்கும் இது இரண்டாவது திருமணம் தான். ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சியை தரும் நியூஸ் ஆக இருந்தது.
சமந்தாவிற்கு பதிலடி
இந்த நிலையில் தான் சமந்தாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாக சைதன்யா குட் நியூஸ் சொல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதில், சோபிதா துலிபாலா கர்ப்பமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் தான் அப்பாவாக போகும் மகிழ்ச்சியான தகவலை நாக சைதன்யா விரைவில் சமூக வலைதளங்கள் மூலமாக அறிவித்து சமந்தாவிற்கு ஷாக் கொடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.