Wherever there are only cheaters for this hero

கேமராமேனாக இருந்து ஹீரோவாக மாறியவர் அவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஆடிய சதுரங்க வேட்டையில் ஆடிப்போனார்கள் முன்னணி ஹீரோக்களே... ஆனால் அப்படி பெற்ற வெற்றியை தக்க வைக்க முடியாமல் சிரமப்படுகிறார்.

 சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான இரண்டு படங்களுமே சரியான அடியாம். உதவும் மனப்பான்மை கொண்ட நடிகரிடம் இருந்து கார்ப்பரேட் கம்பெனி வேறு பணத்தை பிடுங்கி விட்டது என்கிறார்கள்.

அந்தப் படத்தை எடுத்து வைத்துக்கொண்டு ரிலீஸ் செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்திருக்கிறது நிறுவனம். அதோடு புரமோஷனுக்கும் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை.

ஹீரோவே சொந்தக் காசை போட்டு புரமோஷன் செய்தார். ஆனால் படம் ஓடவில்லை. அடுத்த படமும் போங்கு பண்ணிவிட்டது.

இதனால் விரக்தியில் இருக்கும் அவர் நடிப்பில் இருந்து சில காலம் விலகி ஒளிப்பதிவு பக்கமே மீண்டும் சென்று விடலாமா என்று யோசிக்கிறாராம். 

 அவரது நெருங்கிய மீடியா நண்பர் ஒருவரிடம் இதை மனம் விட்டு சொல்லியிருக்கிறார். அவருக்கு இன்னும் ஒளிப்பதிவு வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.