where is dilip and kaviya madhavan..?bavana case issue
நடிகை பாவனா காரில், கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அனைத்து திரையுலகை சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பாவனாவின் வழக்கில் முக்கிய குற்றவாளியாக அவருடைய முன்னாள் கார் ஓட்டுநர், பல்சர் சுனில் கைது செய்யப்பட்டு அவரிடம் கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டர் பல்சர் சுனில், பின் வெளியே வந்த அவரிடம் பலர் பேட்டி எடுக்க முயன்ற போது போலீசார் அனைவரையும் தடுத்ததால் அவரிடம் பேட்டி எடுக்கமுடியாமல் போனது. இருப்பினும் நீதிமன்றத்தில் ஆஜரான பல்சர் சுனில் நீதிபதியிடம் இந்த வழக்கில் பெரிய ஆட்கள் சிக்குவார்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே போலீசார், நடிகர் திலீப்பிடம் பல மணி நேரம் சந்தேகத்தில் பெயரில் விசாரணை நடத்தினர். அதே போல திலீப்பின் இரண்டாவது மனைவி காவியா மாதவனின் வணிக நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இங்கு தான் பாவனாவை ஆபாசகமாக படம் பிடித்த மெமரிகார்டு கொடுத்துள்ளதாக பல்சர் சுனில் போலீசாரிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் திலீப், அவருடைய மேலாளர் அப்புண்ணி, இயக்குனர் நாதிர்ஷா, காவ்யா மாதவன் ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் நேற்றில் இருந்து தலைமறைவாகியுள்ள நடிகர் திலீப்பும், காவியா மாதவன் ஆகிய இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் திலீப் மற்றும் காவியா மாதவன் இவருடைய தொலைபேசி எண்களை டிராக் செய்துள்ளதாகவும். இருவரும் தமிழகம் அல்லது வெளிமாநிலங்களுக்கு தப்பினார்களா என்ற போர்வையில் போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
