when will start sangamithara shooting

சுந்தர்.சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக உள்ள வரலாற்றுப் படம் ‘சங்கமித்ரா’.

இந்தப் படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்க இருந்தார். இந்தப் படத்திற்காக வாள் சண்டை பயிற்சி பெற்ற ஸ்ருதி, திடீரென படத்தில் இருந்து விலகினார்.

எனவே, வேறொரு ஹீரோயினைத் தேடிவந்தனர். பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ள திஷா பதானி இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று அவரை சங்கமித்ரா படத்தில் இணைத்துள்ளனர். இவர் ‘குங்பூ யோகா’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

ஹீரோயின் ஒப்பந்தமானதைத் தொடர்ந்து, ‘சங்கமித்ரா’ ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.

தற்போது ‘கலகலப்பு 2’ படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தோடு முடிகிறது.

எனவே, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ‘சங்கமித்ரா’ ஷூட்டிங் தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.