விஜயகாந்த் எப்போது "கேப்டனாக" மாறினார் தெரியுமா? காரணம் அந்த பிரபல இயக்குனர் தான்!

Rest In Peace Captain : முன்னாள் நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் தனது 71வது வயதில் இன்று காலமானார். வழக்கம் போல டிசம்பர் மாதம் ஒரு கருப்பு மாதமாக மாறியுள்ளது என்றே கூறலாம்.

When Veteran Actor and Politician Vijayakanth titled as Captain who is the reason behind that ans

இந்த 2023 ஆம் ஆண்டு ஏற்கனவே பல உயிரிழப்புகளை கண்டுள்ள இந்த சோகமான சூழலில், ஒரு மிகச்சிறந்த அரசியல் ஆளுமையையும், நேர்த்தியான நடிகர் ஒருவரையும் தமிழ் திரையுலகமும், அரசியல் உலகமும் இழந்துள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. கேப்டன் என்று பலராலும் பாசத்தோடு அழைக்கப்பட்டு வந்த தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான விஜயகாந்த் இன்று தனது 71 வது வயதில் காலமானார். 

தமிழ் திரையுலக வரலாற்றில் இப்படி ஒரு ஆகச் சிறந்த நடிகர் இதுவரை தோன்றியது இல்லை என்றே கூறலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து, கருப்பு நிறம் என்பது நடிப்புக்கு ஒரு தடையல்ல என்பதை ஆழமாக நிரூபித்த ஒரு மாபெரும் கலைஞன் விஜயகாந்த். தமிழ் திரையுலக வரலாற்றிலேயே, ஏன் இந்திய திரையுலக வரலாற்றிலேயே 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காவல்துறை அதிகாரியாக வேடமேற்று நடித்து புகழ் பெற்ற ஒரே நடிகர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

வைகை புயல் முதல்.. காளி வெங்கட் வரை - 2023ல் ரசிகர்கள் மனதை நடிப்பால் நெகிழவைத்த டாப் 4 கோலிவுட் நடிகர்கள்! 

1980வது ஆண்டு தனது கலை பயணத்தை துவங்கிய விஜயகாந்த், கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான "எங்கள் ஆசான்" என்கின்ற திரைப்படம் வரை சுமார் 152 திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவருடைய நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "கேப்டன் பிரபாகரன்". 

கோலிவுட்டின் கேப்டன்... அரசியலில் கருப்பு எம்ஜிஆர் - சோதனைகளை கடந்து விஜயகாந்த் சாதனை நாயகனாக உருவெடுத்த கதை!

இது அவருடைய 100வது திரைப்படம், இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் அவர் "கேப்டன்" என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா போன்ற பலருடைய திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர் கேப்டன் விஜயகாந்த் என்பது யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாத, மறுக்க முடியாத ஒரு விஷயம். 

தனது வாழ்க்கையை ஒரு பாடமாக்கி சென்றுகிறார் விஜயகாந்த் என்றால் அது மிகையல்ல. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சி தொண்டர்களுக்கும், பலரும் தங்களது ஆறுதல்களை கூறி வருகின்றனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios