When did you advertise and earn money? Lakshmi Ramakrishnan who is the owner of theater owners
100 கோடி, 500 கோடி கிளப் என விளம்பரம் செய்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு இப்போது வரிவிலக்கு கேட்கிறீர்கள் என்று வெளுத்து திரையரங்க உரிமையாளர்களை வெளுத்து வாங்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
தமிழ் சினிமாவிற்கு 58 சதவீதம் வரி விதித்திருப்பதால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதற்கு சினிமாக்காரர்கள் தான் காரணம் என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததால் தமிழ்நாட்டில் திரையரங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் 30 சதவீதம் ஏற்கனவே உள்ள கேளிக்கை வரி என மொத்தம் 58 சதவீதத்தை நிர்ணயித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து:
“100 கோடி, 500 கோடி கிளப் என விளம்பரம் செய்துவிட்டு, நட்சத்திரங்களின் சம்பளத்தை உயர்த்திவிட்டு இப்போது அழுவது ஏன்?
அதிகம் பணம் சம்பாதித்து, அதிகம் சம்பளம் கொடுத்துவிட்டு இப்போது விரிவிலக்கு வேண்டும் என்று கேட்கின்றனர்.
சினிமாவை கலையாக எண்ணி படம் எடுப்பவர்களுக்கு மட்டும் வரிவிலக்கு கொடுங்கள். வியாபார படங்களுக்கு வரிவிலக்கு வேண்டாம்” என்று வெளுத்து வாங்கியுள்ளார்.
