அஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் இதுவரை வசூலில் படத்திற்கு எந்த பாதிப்பும் வரவில்லை.

மூன்று நாள்கள் முடிவில் உலகம் முழுவதும் இப்படம் ரூ 85 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் தெரிவிக்கின்றது.

இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ.40 கோடியை வசூலாம். இப்படியே சென்றால் படம் ரூ.100 கோடியை தொட்டுவிடும் என்பதில் ஐயமில்லை.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படம் 2 நாட்களில் மட்டும் 60 கோடிக்கு ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது கொசுறு தகவல்.

தமிழகத்தின் 90% திரையரங்குகளில் விவேகம் படம் திரையிடப்பட்டது. பல சாதனைகளை படைத்த கபாலி படத்தின் சாதனையை முறியடித்ததன் மூலம் விவேகம் புதிய சாதனையை படைத்துள்ளது.