பிரபல தொலைக்காட்சி நடிகை கிறிஸ்டல் டிசோசா, மும்பை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர், ஹர்திக் பாண்ட்யாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அதில் அவரை தன்னுடைய சகோதரர் என குறிப்பிட்டிருந்தார்.

இதில் தான் பிரச்சனையே ஆரம்பித்துள்ளது. திடீர் என என்ன நினைத்தார்கள் என தெரியவில்லை நெட்டிசன்கள், தொடர்ச்சியாக கிறிஸ்டலை கடுமையாக விமர்சனம் செய்து அவரை திட்டி தீர்த்து விட்டார்கள். 

நெட்டிசன்களின் இந்த கமெண்டுக்களுக்கு பாலிவுட் நடிகர் அபர்சக்தி குரானா தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். நடிகையாக இருந்தாலும் அவரும் ஒரு பெண் தான். ஒரு பெண்ணை இப்படி தரக்குறைவான வார்த்தைகளால் கேவலமாக பதிவு செய்ய வேண்டாம்' என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

சிலர் அவரை திட்டுவதற்கான காரணம் என்ன? அவர் புகைப்படம் வெளியிட்டது தவறா? அல்லது பாண்ட்யாவை சகோதரர் என குறிப்பிட்டது தவறா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு திட்டியவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.