Dhanush: ஒருநாள் சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருந்தால் என்ன செய்வேன்..? பக்கா பதிலால்.. அரங்கையே அதிர வைத்த தனுஷ்
தனுஷ் (dhanush) தற்போது பாலிவுட்டில் நடித்துள்ள, திரைப்படமான 'அட்ராங்கி ரே' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தனுஷிடம், ஒரு நாள் ரஜினியாக கண் விழித்தால், என்ன செய்வீர்கள் என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, பக்கா பதிலால் அரங்கையே அதிர வைத்துள்ளார்.
தனுஷ் (dhanush) தற்போது பாலிவுட்டில் நடித்துள்ள, திரைப்படமான 'அட்ராங்கி ரே' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தனுஷிடம், ஒரு நாள் ரஜினியாக கண் விழித்தால், என்ன செய்வீர்கள் என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, பக்கா பதிலால் அரங்கையே அதிர வைத்துள்ளார்.
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரையுலகில் கலக்கி வரும் தனுஷ், தற்போது 'வாத்தி' என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில், இன்று காலை இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது அனைவரும் அறிந்ததே.
இதை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் இந்தியில் நடித்துள்ள 'அட்ராங்கி ரே' படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியான நிலையில், இந்த படத்தின் தமிழ் பதிப்பு, ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது, இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் தனுஷ் மற்றும் நடிகை சாரா அலி கான் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து பிரமோஷன் நிகழ்ச்சியாக, இயக்குனர் கரண் ஜோக்கர் தொகுத்து வழங்கி வரும் கரன் ஜோகர் இன் காபி வித் கரண், நிகழ்ச்சியில் தனுஷும் சாரா அலிகானும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தனுஷ் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் போதே, தான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர் என்றும், இதுபோன்ற நிகழ்ச்சிக்கு பொருத்தமானவரா? என்பது தெரியாது என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷிடம் எப்போதும் போல், எல்லா பிரபலங்களிடமும் எடக்கு, மடக்காக கேள்வி கேட்கும் கரன் ஜோகர், தனுஷ் இடமும் கேள்விகளை கேட்டார்.
குறிப்பாக ஒரு நாள் நீங்கள் ரஜினியாக கண் விழித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, பெரிதாக எந்த ஒரு பில்டப்பும் இல்லாமல், நச்சென்று ரஜினி சாரை போல் நடந்து கொள்வேன் என பக்காவாக பதிலளித்தார். இதற்கு கரணும், நடிகை சாரா அலி கான் சிரித்தது மட்டுமின்றி... அந்த அரங்கமே சிரிப்பில் மூழ்கியது. ஏற்கனவே தனுஷ், பாலிவுட் திரையுலகில் நடித்த 'ஷமிதாப்' படம் 2015ஆம் ஆண்டு வெளியான நிலையில், ஏன் இவ்வளவு இடைவெளி விட்டு மற்றொரு பாலிவுட் படத்தில் நடிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதற்கு, தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதால், தன்னால் நடிக்க முடியவில்லை என்றும் அனைத்திற்கும் அதற்கான நேரமும், நல்ல கதையும், இயக்குனரும், அமைய வேண்டும் என மிகவும் எளிமையாக தனுஷ் பதிலளித்தார்.