கடந்த சில நாட்களுக்கு முன் பீட்டர்பால் என்பவரை நடிகை வனிதா திருமணம் செய்து கொண்டார் என்பதும், திருமணத்தின் போது மோதிரம் மாற்றிய பின்னர், இருவரும் லிப்கிஸ் அடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. கிறிஸ்துவ முறைப்படி நடக்கும் திருமணத்தில் இது சகஜம்தான் என்றாலும் குழந்தைகள் முன் வனிதா கொடுத்த லிப்கிஸ் சமூக வலைத்தளத்தில் விவாதத்திற்குரியதாக மாறியது

.

இந்நிலையில் வனிதா தனது சமூக வலைத்தளத்தில் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு முத்தம் குறித்து ஒரு அறிவுரை கொடுத்துள்ளார். அதில் அவர், ''பெற்றோர்களுக்கு ஒரு கட்டுப்பாட்டு எச்சரிக்கை. உங்கள் குழந்தைகளை டிஸ்னி கார்ட்டூன்களை பார்க்க அனுமதிக்க வேண்டாம். இந்த கார்ட்டூன் படங்கள் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. அதில் வயது வந்தோருக்கான காட்சிகள் மற்றும் முத்தக்காட்சிகள் உள்ளன. ஒரு ஆண் ஒரு பெண்ணை நேசிக்கும்போது அல்லது அவர்கள் திருமணம் செய்யும் போது அவர்கள் முத்தமிடுகிறார்கள் என்பதை குழந்தைகள் ஒருபோதும் தெரிந்து கொள்ள கூடாது'' என்று கூறியுள்ளார்.

வனிதாவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குழந்தைகள் முன் திருமணம் செய்து கொண்டு, கணவருக்கு லிப்கிஸ் கொடுத்த வனிதா, இந்த கருத்தை கூறுவதற்கு தகுதியற்றவர் என்ற ரீதியில் நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.