சுமார் ஒரு ஏழு  நாட்களுக்கு முன்பு ரஜினி மற்றும் பாலிவுட் ஜாம்பவான்  நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகம் முழுவதும்  சுமார் 10000 தியேட்டரில் வெளியான படம் தான்  2.௦. இந்த படம் வசூல் 500 ரூபாய் செய்ததாக  பகிரங்கமாக ட்வீட் போட்டனர்?  இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூறியிருந்த 400 கோடி வசூல் என ஆங்கில ஊடகம் போட்ட செய்தியை ஆஸ்கர் நாயகனும் ட்வீட் போட்டிருந்தார்.

தென் மாநிலங்களில் படத்தின் வசூல் மந்தம், பெங்களூரு, தமிழகத்தில் 70 சதவிகிதம் தியேட்டர்கள் ஈ ஓட்டிக்கொண்டு இருந்தது. இப்படி இருக்கையில் இவர்கள் யார் கொடுக்கும் வசூல் விவரத்தை வைத்து வெளியிடுகிறார்கள்? முதல் நாள் தமிழகத்தில் 13 கோடி மொத்த வசூல் என்கிற போது, நான்கு நாட்களில்  எப்படி 50 வசூலிக்கும்? ஏன் பில்டப்பு?

2.0 படத்தின் தமிழக வசூல் நேற்றுடன் முடிவடைந்த முதல் வார கணக்குப்படி சுமார் ஐம்பது கோடி ரூபாய் என்கிறது தியேட்டர் வட்டாரம். இதில் வரி, தியேட்டர் பங்குத் தொகை கழித்து தயாரிப்பாளருக்கு கிடைக்க கூடியது 27 கோடி ரூபாய் மட்டுமே.

ஆனால் இங்கு மொத்த வசூல் மட்டுமே சாதனையாக சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது இது போன்ற  புருடா விடப்படுகிறது.

இதேபோல கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூட கபாலி படம் வெளியானபோது அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு 500 கோடி வசூல் வரலாற்று சாதனை என ரஜினியிடம் அடுத்த கால்ஷீட்  வாங்குவதற்காக கப்ஸா விட்டார். 

ஆனால் ரஜினி டிமிக்கி கொடுத்ததும்  கபாலி சாதனை வசூல் இல்லை என்பதுடன் தமிழகத்தில் அப்படத்தின் ஏரியா உரிமை வாங்கி நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு குறைந்த பட்ச தொகையை  அழுதார் கலைப்புலி.

2.0 படம் இதில் இருந்து வேறுபட்டது. தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் லைகா படத்தை நேரடியாக வெளியிட்டிருக்கிறது. ஆந்திரா, கேரளாவில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டபடி விநியோகஸ்தர்கள் பணம் தரவில்லை. இந்த சூழ்நிலையில் படத்தின் வசூலை லைகா நிறுவனம் மிகைப்படுத்தி கூறும் போது அதற்கு எதிராக விபரங்களை வெளியிட வேண்டிய கட்டாயம் விநியோகஸ்தர்களுக்கு இல்லை என்பதால் லைகா நிறுவனம் வசூல் விபரங்களில் தப்பாட்டம் ஆடி வருகிறது என்கின்றனர். 

2.0 படங்களின் விநியோகஸ்தர்கள். அதற்கு என்ன காரணமாக இருக்க கூடும் என்கிற போது படத்தயாரிப்பில் முதலீடு செய்வது மட்டும் லைகாவின் நோக்கம் இல்லை. இந்தியாவில் பல தொழில்களில் முதலீடு செய்ய இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதற்கு அரசியல் ரீதியாக செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ள, பொது வெளியில்  தனது நிறுவனத்தை பிரபலப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனை உலகம் முழுவதும் எளிதில் கொண்டுசெல்லும் சக்தி சினிமாவுக்கு உள்ளது. அதனை கத்தி படத்தில்  தொடங்கி 2 .0 மூலம் சாதித்து உள்ளது லைகா.