லட்சுமி

லட்சுமி இந்த குறும்படம் சாமானிய மனிதனை புரட்டி போட்ட ஒரு குறும்படம்.பெண்ணின் பாலியல் சுதந்திரத்தை பேசிய இப்படம் எண்ணற்ற சர்ச்சைகளை சந்தித்தது.இதில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்த லட்சுமி பிரியா கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டார்.ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட குறும்படம் என்ற பெயரையும் எண்ணற்ற விருதுகளையும் தட்டிச்சென்றது.

மா

இதற்கு அடுத்த படியாக மா என்ற குறும்படத்தை எடுத்தார் சர்ஜூன். சிறு வயதிலேயே கர்ப்பமுறும் தனது மகளை தாய் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே இக்குறும்படத்தின் கதை.இதுவும் மக்களிடையே வெகுவான பாராட்டுக்களை பெற்றது.எதிர்பார்ப்பு

இந்த நிலையில் குறும்படங்களை இயக்கி வந்த சர்ஜூன் முதல் முறையாக ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.படத்தின் பெயர் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம். இப்படத்தின் டைட்டிலே மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள்

இப்படத்தில் சத்யராஜ், வரலட்சுமிசரத்குமார் கிஷோர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.டைம்லைன் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

முதல் பாடல்

இந்நிலையில் இப்படத்திலிருந்து முதல் பாடல் நாளை ரிலீஸாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து இயக்கவுள்ளார் சர்ஜூன்.