பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் விளையாட்டாக ஓவியா ஆரவை காதலிக்க ஆரம்பித்து தற்போது இந்த காதல் சீரியஸ் ஆகி ஓவியா மனஅழுத்தத்திற்கு ஆளாகி வெளியேறும் நிலைக்கு தள்ளிவிட்டது.

ஓவியா வெளியேறியது குறித்து கமலஹாசன் அனைத்து போட்டியாளர்களிடமும், தீர விசாரித்தார். அனைவரிடமும் விசாரித்தது போல ஆரவிடமும் இதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ஒரு நிலையில் ஆரவ் பதில் சொல்லமுடியாமல் திணறி நின்றார்.

மேலும் கமல் ஓவியாவை பற்றி கேற்கும் போது... ஓவியா பல முறை என்னை காதலிக்காமல் ஏன் முத்தம் கொடுத்தாய் என கேட்டார். ஆனால் நான் உனக்கு முத்தம் கொடுக்கவே இல்லை என்று மட்டுமே சொல்லி வந்தார் ஆரவ். தற்போது பலமுறை கமல் கேட்டதும், தான் மருத்துவ ரீதியாக மட்டுமே ஓவியாவுக்கு முத்தம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதற்கு கமல் நான் பல விதமான முத்தங்களை கேள்வி பட்டிருக்கேன் முதல் முறையாக மருத்துவ ரீதியாக கொடுக்கப்பட்டது இது தான் முதல் முறை என்று ஆரவை கலாய்த்தார். தொடர்ந்து பேசிய கமல் வெளியில் உள்ள ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஓவியா மேல் மட்டும் தான் தவறு இருப்பதாக நினைக்கின்றனர்.

ஆகையால் நீங்கள் இந்த மருத்துவ முத்தத்தை பற்றி கண்டிப்பாக அனைவரிடமும் கூற வேண்டும் என கூறி ஆரவை வெளியே அனுப்பினார்.