பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக செய்தி பரவி வருகிறது. ஆனால் இந்த செய்தியை போண்டா மணி மறுத்துள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி,இவர் 180 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். காமடி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான தனுஷ் நடித்த பட்டாசு படத்திலும் நடித்திருக்கிறார் போண்டா மணி.

சீனாவை தொடர்ந்து உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தலைக்காட்ட தொடங்கி உள்ளது. இந்நிலையில் காமெடி நடிகர் போண்டா மணிக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் வந்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வேகமாக பரவியது.

இது குறித்து போண்டா மணிக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு 'கொரோனா வைரஸ் காய்ச்சல் இருப்பதாக  சமூக வலை தளங்களில் செய்தி வெளியானது முற்றிலும் தவறு. நான் நலமுடன் இருக்கிறேன். தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறேன் என்னைப்பற்றி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

T.Balamurukan