Asianet News TamilAsianet News Tamil

“தமிழக அரசிடமும் உதவி கேட்டோம்.... அதற்குள் ஹாஸ்பிட்டல் சேர்மன்”.... உண்மையை உடைத்த எஸ்.பி.பி.சரண்...!

பணத்தை பற்றி பேச வேண்டாம் எனக்கூறிவிட்டார்கள். அவர்கள் செய்த உதவிக்கு என் குடும்பம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். 

What happend on SPB passes away SPB charan Explain the truth about bill Settlement
Author
Chennai, First Published Sep 28, 2020, 7:35 PM IST

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பிறகு தேறி வந்த அவருக்கு கடந்த 4ம் தேதி பரிசோதனை செய்தபோது கொரோனா நெகட்டிவ் என்று தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த  வெள்ளிக்கிழமை மதியம் 1.04 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 

What happend on SPB passes away SPB charan Explain the truth about bill Settlement

 

இதையும் படிங்க: தோள்களை விட்டு நழுவும் ட்ரான்ஸ்பிரண்ட் உடையில்... கவர்ச்சி நங்கூரமிட்ட யாஷிகா..! மெர்சலான இளசுகள்..!

இதையடுத்து அவருடைய உடல் தாமரைப்பாகத்தில் உள்ள பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் 51 நாட்களாக எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி.யின் சிகிச்சைக்கான பில் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இதுகுறித்து ஏற்கனவே வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த எஸ்.பி.பி. சரண், “ஹாஸ்பிட்டல் பில் அதிகமாக இருந்தது. எங்களால் கட்ட முடியவில்லை, தமிழக அரசிடம் பேசினோம். சரியான பதில் வராத காரணத்தால் குடியரசுத் துணைத் தலைவரிடம் பேசியிருந்தேன். அவருடைய மகள்தான் இந்த மருத்துவக் கட்டணத்தைக் கட்டினார் என்று எல்லாம் சோசியல் மீடியாவில் வதந்தி பரவி வருகிறது, அதுகுறித்து மருத்துவர்களுடன் விளக்கம் அளிக்க உள்ளேன் என கூறியிருந்தார். 

What happend on SPB passes away SPB charan Explain the truth about bill Settlement

அதன்படி எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்களுடன் , எஸ்.பி.பி. சரண் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பாவின் சிகிச்சைக்கு என்ன செலவாகும் என கூறப்பட்டதோ, அதை வாரம் தோறும் பகுதி, பகுதியாக செலுத்தி வந்தோம்.  அதில் இன்னொரு பகுதியாக இன்சூரன்ஸ் தொகை வந்தது. அப்பா காலமானவுடன் மருத்துவக் கட்டணம் இன்னும் எவ்வளவு உள்ளது என்று மருத்துவர்களிடம் கேட்டேன். சிஇஓவிடம் பேசவில்லை. மருத்துவர் தீபக் எனக்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவரிடம்தான் பேசினேன். கடைசி நாள் எங்களுடைய அக்கவுண்டண்ட் மற்றும் பணத்துடன் வந்தோம். ஆனால், மருத்துவமனை சேர்மன் எங்களிடமிருந்து எந்தவொரு காசும் வாங்க வேண்டாம் என்று கூறியிருப்பதாகச் சொன்னார்கள். எவ்வளவு சீக்கிரமாக, சுமுகமாக அப்பாவை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போக முடியுமோ அதைச் செய்து கொடுங்கள் எனச் சொல்லியிருக்கிறார்.

What happend on SPB passes away SPB charan Explain the truth about bill Settlement

 

இதையும் படிங்க: “அஜித் வீட்டில் இருந்தே வருத்தப்பட்டுக் கொள்ளட்டும்”... செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளித்த எஸ்.பி.பி.சரண்!

பணத்தை பற்றி பேச வேண்டாம் எனக்கூறிவிட்டார்கள். அவர்கள் செய்த உதவிக்கு என் குடும்பம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். எங்களால் பணத்தை கட்டமுடியாமல் இல்லை. தமிழக அரசிடமும் உதவி கேட்டிருந்தோம். ஆனால் அதற்குள் மருத்துவமனை நிர்வாகம் பணம் வேண்டாம் எனக்கூறிவிட்டார்கள். அந்த முடிவை சேர்மேன் எப்போது எடுத்தார் என எனக்கு தெரியாது. இதனால் அப்பா முதல் நாளே இறந்துவிட்டார் என்றும், பணப்பிரச்சனையால் தான் நாங்கள் அடுத்த நாள் இறந்ததாக அறிவித்தோம் என்றும் தேவையில்லாத வதந்திகளை பரப்புகிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் எனக்கேட்டுக்கொண்டார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios