தமிழக அரசியலில் பல பிரச்சனைகள் இருந்தும் அதனை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் தற்போது பிக்பாஸ் பிரச்சனை பற்றிதான் தமிழக மக்கள் அனைவரும் பேசி வருகின்றனர்.

அதிலும் தற்போது இளைஞர்களில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ஓவியா காதல் தோல்வியின் துக்கம் தாங்கமுடியாமல் நேற்று நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்று தான் தகவல்கள் வந்தது.

அதை தொடர்ந்து அவர் வெளியேறிவிட்டார் என்றும் கூறி வந்தனர், ஆனால், இதை நம்புவதா? வேண்டாமா? என்ற மனநிலையே அனைவரிடத்திலும் இருந்தது.

ஆனால், உண்மையாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் ஏதோ நடந்துள்ளது, அதனால் தான் நேற்று போலிஸார் வந்து விசாரணை நடத்தி சென்றுள்ளனர். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்திய புகைப்படங்கள் தற்போது வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.