*    நெருங்கிய சொந்தம் என்பதையும் தாண்டி, நல்ல தொழில் முறை நண்பர்கள் தனுஷ் - அனிருத் இருவரும். ஆனால் சில பிரச்னைகளால் பிரிந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இப்போது இணைகின்றனர். இதற்கு ரஜினியின் நட்சத்திர பிறந்த்நாள் வைபவத்தின் போது போயஸ் வீட்டில் சந்தித்த இவர்கள் இருவரையும், ரஜினியே சேர்த்து வைத்தார்! என்று சொல்லப்பட்டது. 

ஆனால் அதையும் தாண்டி, தனுஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவருக்குள்ளும் மீண்டும் ஈகோ பஞ்சாயத்து வெடித்துள்ளது, அதனால்தான் அனியின் அணியை தனுஷ் நாடிவிட்டார்! என்கிறார்கள். 

*    சத்தமே இல்லாமல் தர்பார் படத்தில் ஒரு செருகல் நடந்திருக்கிறது. ஆம், மொத்த படமும் முடிந்துவிட்ட நிலையில், ரஷ் போட்டுப் பார்த்த ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஏதோ ஒன்று குறைவது போல் இருந்தது. எனவே சட்டுன்னு ஒரு பாடல் காட்சியை  உள்ளே செருக நினைத்தார். தயங்கி ரஜினியிடம் அவர் கேட்க, ‘அதனாலென்ன பண்ணிடலாம்!’ என்று ரஜினியும் தலையாட்ட, ஷூட் முடிஞ்சு, சேர்த்தும் விட்டனர். 

*    விஜய்சேதுபதியுடன் இணைந்து விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் பார்வை  மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் நடந்தது. ஷூட்டுக்கு வரும் விஜய், இந்த மாணவர்களிடம் வந்து பேசுவார்! என்று யூனிட் சொல்லியது. அக்குழந்தைகளும் பாவம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் வெயிட் பண்ணியும் வேஸ்ட். இவர்களிடம் வந்து பேசாமலேயே ஷூட் முடிந்து கிளம்பிவிட்டார் விஜய். இந்த தகவல் பெரும் குறையாக சோஷியல் மீடியாவில் பரவிட, இதோ ஒரு  ஷெட்யூலை முடித்துவிட்டு பர்ஷனலாக அங்கே வருகிறேன் என்று சொல்லியுள்ளாராம். 

*    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வைத்து, நடிகர் சித்தார்த் பெரும் ஆவேசம் காட்டிப் பேசியிருக்கிறார். அவரது ட்விட்டரும் பெரும் கோவப்பட்டிருக்கிறது. இது டைரக்டர் ஷங்கரை பெரிதாய் பாதிக்கிறதாம். 

காரணம்! கமல் நடிக்க, ஷங்கர் இயக்கும் இந்தியன் -2 படத்தில் சித்தார்த்தும் இருக்கிறார். ஏற்கனவே இந்த மசோதாவுக்கு எதிராக கமல் அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில் சித்தார்த்தும் இதில் தனி ரூட் போட்டு தாண்டவமாடுவதால் டெல்லி அதிகார மையமானது, தமிழக அதிகார மையம் வழியே டைரக்டர் ஷங்கரிடம் எரிச்சலைக் கொட்டுகின்றனராம். 

‘ உங்க படத்துலேயும் இதைத்தான் கிளறப்போறீங்களா?’ என்று கேட்டுள்ளனர். ஏற்கனவே படாதபாடு பட்டு, கிட்டத்தட்ட டிராப் லெவலுக்கு போன இந்தப் படத்தை மீட்டார் ஷங்கர். ஆனால் இவர்கள் இருவரின் செயல்களோ, படத்துக்கு சங்கு ஊதிடுமோ! என்று பயப்படுகிறாராம். 

அதிகார மையங்கள், கையோடு இப்படத்தின் தயாரிப்பாளரான லைக்கா நிர்வாகி சுபாஷ்கரனிடம் ’என்.ஆர்.ஐ. முதலீடு, வரி விதிப்பு’ என்பதில் ஆரம்பித்து பல விஷயங்களை சொல்லி கேள்வி கேட்கிறார்களாம். நெருக்கடியில் சிக்கிய அவரும் ஷங்கரைத்தான் கேள்வி கேட்கிறாராம். 

டென்ஷனான ஷங்கரோ ‘ என் படத்துல அவங்க ரெண்டு பேரும் நடிக்கிறாங்க, அவ்ளோதான். நான் ஒண்ணும் அவங்களோட அரசியல் இயக்குநரில்லை.’ என்று கொட்டிவிட்டாராம். 
கரெக்ட்டு!