சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி, சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் ”பாஷா”. ”நான் ஒரு தடவை சொன்னா…! நூறு தடவை சொன்ன மாதிரி…!” ஃபேமஸ் பஞ்ச் டயலாக் கூட இந்த படத்தில் இடம்பெற்றது தான் . கேங்ஸ்டர் ஆகவும், ஆட்டோ ஓட்டுனராகவும், இந்த படத்தில் வரும் பாஷா ரஜினியை ரசிகர்கள் இன்றும் பிரமிப்புடன் பார்க்கின்றனர்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை, இயக்குனர் சாய் ரமணி, ரஜினிகாந்தை வைத்து இயக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இவர் தான் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ”மொட்ட சிவா கெட்ட சிவா” படத்தை இயக்கியவர். தமிழில் ஹிட் ஆன படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது தான், சமீப காலமாக கோலிவுட்டில் ட்ரெண்டாகி இருக்கின்றது.

இதனால் இவர் பாஷா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்டை தயாரித்து, ரஜினியை அனுகி இருக்கிறார். ஆனால் ரஜினியோ, பாஷா ஒரு க்ளாசிக் திரைப்படம். அது போன்ற படங்களை மீண்டும் எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வேறு ஏதாவது புதிய கதை இருந்தால் கொண்டு வாருங்கள் என தெரிவித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து இயக்குனர் சாய் ரமணி, தற்போது ரஜினிகாந்திற்காக புதிதாக ஒரு ஸ்கிரிப்டை தயாரித்து வருகிறார். தற்போது கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் பிஸியாக நடித்து வரும் ரஜினி, அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால், ரஜினியின்  அடுத்த படம் என்ன? என்பது குறித்து இப்போதே எதிர்பார்ப்புகள் கூடி இருக்கிறது.