We will vote against GST for the entire cinema industry - Kamal Hassan ...

ஒட்டு மொத்த சினிமா துறையும் இணைந்து ஜிஎஸ்டிக்கு எதிராக குரல் கொடுப்போம் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும், 58 சதவீத ஜிஎஸ்டியை எதிர்த்து திரையரங்குகள் இன்று முதல் மூடப்பட்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்திருந்தார்.

மேலும், சினிமா துறை ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் போடப்பட்டுள்ளது. கேளிக்கை வரி என 30 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. 58 சதவீத வரி என்றால் நாங்கள் எப்படி திரையரங்கை நடத்த முடியும்? எங்களுக்கு வரும் 100 ரூபாய் வருமானத்தில் 58 ரூபாயை அரசுக்கே செலுத்த வேண்டியுள்ளது.

எனவே, தமிழகம் முழுவதும் இன்று முதல் (3ம் தேதி) சுமார் 1000 திரையரங்கள் மூடப்படும் என்று தெரிவித்திருந்தார். மற்ற மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முதலில் டிக்கெட் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட்டது. தற்போது ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு டிக்கெட் கட்டணம் ரூ.118 ஆக உயர்ந்தது.

இந்த டிக்கெட் டிக்கெட் 30 சதவீத கேளிக்கை வரியுடன் சேர்த்து தமிழகத்தில் மட்டும் ரூ.148 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற மாநிலங்கள் போன்று ஒரே வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும் என்று அபிராமி ராமநாதனின் கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் புதிய டப்பிங் ஸ்டூடியோ திறப்பு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் கூறியது: “ஒட்டு மொத்த சினிமா துறையும் இணைந்து ஜிஎஸ்டிக்கு எதிராக குரல் கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தால் திரைப்பட தொழில் பாதிக்கப்படும் என்றும், தான் நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்றும் நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.