Asianet News TamilAsianet News Tamil

Meera Mithun : நடிகை மீரா மிதுனுக்கு "நோ" ஜாமீன்.. சூப்பர் மாடலுக்கு வந்த 'திடீர்' சோதனை..வலைவீசும் போலீஸ் !!

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

Warrant against tamil actress meera mithun in non bailable meera mithun police arrest in soon
Author
Tamilnadu, First Published Mar 25, 2022, 12:56 PM IST

சூப்பர் மாடல் மீரா மிதுன் :

8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில்  பங்கேற்று மக்கள் மத்தியில் அறிமுகமானார். பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராத நிலையில் அதிருப்தி அடைந்த மீரா மிதுன் தமிழ் திரையுலக பிரபலங்கள் பற்றி தரக்குறைவாக பேசி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.

Warrant against tamil actress meera mithun in non bailable meera mithun police arrest in soon

அதனால், அவரை திட்டி தீர்ப்பதற்காகவே ஒரு ஃபாளோவர்ஸ் பட்டாளம் உருவானது. தனது கருத்தை எதிர்மறையாக கேட்பதற்காவது ஒரு கூட்டம் இருக்கிறதே என்ற பாணியில் மீரா மிதுன் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி வந்தார். செய்தி சேனல்கள், சமூக வலைதளப்பக்கங்கள் என எங்கு சென்றாலும் மீரா மிதுன் குறித்த தகவல்களும், செய்திகளும் உலா வந்தன. 

சர்ச்சை பதிவு :

இதனை தொடர்ந்து, பிரபல நடிகர்கள் மற்றும் அவர்களுடைய மனைவி உள்ளிட்ட அனைவரையும் இழிவாக பேசிய மீரா மிதுன், பட்டியலின மக்கள் குறித்து தரக்குறைவாக பேசி அந்த வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

Warrant against tamil actress meera mithun in non bailable meera mithun police arrest in soon

மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் :

அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை.  இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.ஜாமீனில் வெளியே வர முடியாத படி,  பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் மீண்டும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios