உலக மக்களை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ், தமிழகத்தையும் சுமார் 7 மாதத்திற்கு மேலாக முடக்கி போட்டது. இதில் திரையுலகை சேர்ந்த பலர் பெரிதும் பாதிக்கப்பட்டது.  இதனால் நேற்றே  சில திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கப்பட்டாக கூறப்பட்டது.

இந்த நிலையில் திரையரங்குகள் திறந்தாலும் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய வாய்ப்புகள் இல்லை என்பதால் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவார்களா? என்ற சந்தேகமும் ஏற்பட்டது. 

சமீப காலமாக, தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் விபிஎப் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராததால், புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா சோனியா அகர்வால்..! வைரலாகும் புகைப்படம்..!
 

நவம்பர் மாதத்திற்கான100% விபிஎப் கட்டணத்தையும் தானே ஏற்றுக் கொள்வதாக க்யூப் அமைப்பு அறிவித்துள்ளது.  தீபாவளி அன்று  புதிய திரைப்படங்கள் வெளிவந்து திரைஉலகம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்காக தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அறிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

எனவே இந்த மாதம் மட்டும் விபிஎப் கட்டணத்தை முழு அளவில் ஏற்றுக் கொள்வதாக க்யூப் அறிவித்துள்ளதால் இந்த பிரச்சினைக்கு தற்காலிகமாக முடிவு கிடைத்துள்ளது. அதே நேரத்தில், அடுத்த மாதத்தில் இருந்து மீண்டும் விபிஎப் பிரச்சனை துவங்குமா, அதற்கும் பேசி தீர்க்கப்படுமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.