‘நா ரெடி’ டான்ஸ் வீடியோவால் ஜாதி சர்ச்சையில் சிக்கிய VJ ரம்யா.. ட்ரோல் செய்த நெட்டிசன்கள்..

லியோவின் நா ரெடி பாடலுக்கு நடனமாடி உள்ள பிரபல தொகுப்பாளர் ரம்யா சுப்ரமணியம் சர்ச்சையில் சிக்கி உள்ளார். 

VJ Ramya caught in caste controversy with 'Na Redi' song video..Trolled by netizens..

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ்  கூட்டணியில் உருவாகி வரும் படம் லியோ. இப்படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின் என நடிகர் பட்டாளமே இணைந்துள்ளனர். செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான லியோ குறித்து அவ்வப்போது பல அப்டேட்களையும் படக்குழு பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியானது. மற்ற விஜய் பாடல்களை போலவே இந்த பாடலுக்கு அவரின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரூல்ஸ் மீறிய நடிகர் விஜய்.. வைரலான வீடியோ.. தளபதி மீது அதிரடி ஆக்‌ஷன் எடுத்த போக்குவரத்து போலீசார்..!

இந்த நிலையில் லியோவின் நா ரெடி பாடலுக்கு நடனமாடி உள்ள பிரபல தொகுப்பாளர் ரம்யா சுப்ரமணியம் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அந்த வீடியோவிற்கு அவர் அளித்த தலைப்புதான் இந்த சர்ச்சைக்கு காரணம். நா ரெடி பாடலுக்கு பரதநாட்டியம் ஸ்டைலில் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ள குத்து பாடலை கிளாசி-ஃபை' செய்ய விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

 

அவரின் இந்த பதிவுக்கு சமூக ஊடகங்களில்  பல பயனர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். சிலர் அவரின் கருத்தை 'சாதிவெறி' என்று கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் எந்த கலை வடிவமும் உயர்ந்ததல்ல என்பதையும் எல்லா வகையான கலையும் ஒன்று தான் என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர். எனினும் அவர் சாதியை பற்றி குறிப்பிடவில்லை, கிளாசிக்கல் டான்ஸ் என்றே குறிப்பிட்டுள்ளார் எனவும் ரம்யாவுக்கு ஆதரவாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து , ரம்யா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தன் மீதான விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார். அவரின் பதிவில், " மக்கள் தங்கள் மனதில் உங்களை பற்றி பல்வேறு பதிப்புகளை வைத்துள்ளனர் என்ற உண்மை அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். இறுதியில், உங்களை யார் என்று நீங்கள் அறிவீர்கள் என்பது தான் மிகவும் முக்கியமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சின்னத்திரையில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய ரம்யா சுப்ரமணியம், விஜய் தொலைக்காட்சியில் பல பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ராதா மோகனின் ‘மொழி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு 'ஓகே கண்மணி', 'மாசு என்கிற மாசிலாமணி', 'வனமகன்', 'கேம் ஓவர்', 'ஆடை' மற்றும் 'மாஸ்டர்' போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் பாத யாத்திரை... அரசியல் எண்ட்ரிக்கு முன் தளபதி விஜய் செய்ய உள்ள தரமான சம்பவம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios