பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலை பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. சித்ரா மிகவும் தைரியமானவர்... அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியல் இல்லை என சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கூறி வருவதால், சித்ராவின் தற்கொலை மர்ம மரணமாக பார்க்கப்படுகிறது. முல்லையாக  நெஞ்சம் கவர்ந்த சித்ராவின் திடீர் மரணத்தில் இருந்து இன்று வரை அவருடைய ரசிகர்கள் மீளா துயரில் ஆழ்ந்துள்ளனர். 

இந்நிலையில் இதற்கு முன்னதாக சுஷாந்த்  சிங் ராஜ்புட் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் EVP மூலமாக பேசிய ஆவி நிபுணர் சார்லி சிட்டண்டன் என்பவர் சித்ராவின் ஆவியுடன் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் அவர் சார்லியின் கேள்விக்கு சித்ராவின் ஆவி பதிலளிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

நீங்கள் எப்படி இறந்தீர்கள்?’ என அவர் கேட்க ‘அதை என்னால் கூற முடியாது’ என சித்ரா பதிலளிக்கிறார். மேலும், மோசமானது.. அவர்கள் வந்தார்கள். எனக்கு அன்பு வேண்டும்.. கூற முடியவில்லை. என அவர் பேசுவது அதில் பதிவாகியுள்ளது. உங்கள் உறவினர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என அவர் கேட்க ‘முடிந்துவிட்டது’ என அவர் பதில் கூறுகிறார். தற்போது சோசியல் மீடியாவில் அந்த வீடியோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.