சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் சீரியல் நடிகையாக மாறி தமிழ் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் தற்கொலை தற்போது வரை நம்பமுடியாத ஒரு நிகழ்வாகவே உள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை நாயகியாக மின்னுவதற்கு முன்பே இவர் மறைந்தாலும், விரைவில் இவர் நடித்து முடித்துள்ள 'கால்ஸ்' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான 'கால்ஸ்' படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த படத்தில் எடுக்கப்பட்டுள்ள பல காட்சிகள், இவருடைய சொந்த வாழ்க்கைக்கு தொடர்புடையதாக உள்ளது மற்றொரு ஆச்சர்யம் எனலாம். 'கால்ஸ்' ட்ரைலர் வெளியாகி ஒரு வாரம் ஆகும் நிலையில், தற்போது 1.5மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

ஜெ.சபரிஷ் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை, எஸ். ஜெயக்குமார், ஜெ.காவேரி, ஜெ.சபரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஜெ. சபரிஷ் தமீன் அன்சாரி இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகவுள்ளது.