’ராட்சசி’படத்தில் நடித்ததற்காக நடிப்பு ராட்சசி ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான அரசு விருது வழங்க வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார் காமெடி நடிகர் விவேக்.

படங்களில் நடிக்கிற நேரங்கள் தவிர்த்து, மரங்கள் நடுவது, மழைநீர் சேமிப்பு தொடர்பாக பிரச்சாரம் செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, ஏரிகளில் தூர்வாறும் இளைஞர்களை நேரில் சென்று ஆதரித்து உற்சாகப்படுத்துவது என்று ஒரு முழுநேர சமூக செயற்பாட்டாளராக மாறிவருகிறார் நடிகர் விவேக். அதே போல் சிறந்த கருத்துக்களோடு வெளியாகும்படங்கள் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் பண்ணவும் தயங்குவதில்லை.

இந்நிலையில் நேற்று வெளியான ஜோதிகாவின் ‘ராட்சஸி’படம் அரசுப்பள்ளிகளின் அவசியம் குறித்தும் அதன் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் பேசுவதால் அப்படம் குறித்து பதிவிட்ட விவேக்,..ராட்சஷி பார்த்தேன். ஜோதிகா அவர்களுக்கு அரசு விருது கிடைக்க வேண்டும்.வணிக சமரசம் இன்றி இப்படைப்பைக் கொடுத்த @DreamWarriorpic பிரபுவுக்கும் இயக்குனர் கவுதமுக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.@RSeanRoldan 👌   அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் தலையில் இப்படம் ஒரு கிரீடம்! @Jyothika_offl என்று மனதாரப் பாராட்டியுள்ளார்.