vivek pair is ajith vijay heroine

நடிகர் விவேக் திரைப்படத்தில் வரும் காமெடி காட்சிகளே கருத்துள்ளதாக தான் இருக்கும் என்றால் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் பற்றி சொல்லவா வேண்டும். 

இந்நிலையில் தற்போது தற்காப்பு கலையை மையப்படுத்தி இயக்குனர் விஜி தயாரித்து இயக்கம் திரைப்படம் 'எழுமின்' இந்த படத்தில் பெண்கள் தற்காப்பு கலை பயில வேண்டிய அவசியம் குறித்து இந்த படம் உருவாக உள்ளது.
இயக்குனர் விஜி ஏற்கனவே கலையரசன் நடித்த 'உரு' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடதக்கது. 

மேலும் இந்த படத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்த தேவயாணி நடிக்க உள்ளார்.

இவர் கோலிவுட் முன்னணி நடிகர்கள், அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் நடித்தவர். அதிலும் இவர் அஜித்துடன் நடித்த 'காதல் கோட்டை' திரைப்படம் பல காதலர்களால் இன்றும் ரசிக்கும் திரைப்படமாகவே உள்ளது. இந்த படத்திற்காக தேவயாணி பல விருதுகளை பெற்றார்.

திருமணத்திற்கு பின் திரைபடத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்டு சீரியல், மற்றும் சின்னத்திரை நிகழ்சிகளில் கவனம் செலுத்தி வந்த இவர், நீண்ட இடைவேளைக்கு பின் 'ஸ்டாபெரி' படத்தில் சமுதிரகனிக்கு ஜோடியாக நடித்தார். அதை தொடர்ந்து தற்போது 'எழுமின்' படத்தில் விவேக்கிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார் சமீபத்தில் தான் இந்த படத்தின் படபிடிப்பு துவங்கியது.