பல்வேறு விமர்சனங்களை பெற்று வந்தாலும் அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படம் வசூலில் தொடர் சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விவேகம்’ படம் முதல் வார இறுதிநாள் வசூல் மட்டும் விண்ணைத் தொடும் சாதனையை படைத்துள்ளது.

சென்னையில் மட்டும் இந்த வார இறுதி நாட்களில் மட்டும் 5.75 கோடி அள்ளியுள்ளது.

அதோடு ஒட்டு மொத்தமாக ரூ.150 கோடி வசூல் செய்துள்லது. இதனால் ரூ.100 கோடிகள் ஈட்டும் பாக்ஸ் ஆபிஸ் படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது விவேகம்.

முன்னதாக பாகுபலி முதல் மூன்று நாள்களில் வசூல் சராசரியாக ரூ.3.24 கோடி இருந்தது. பைரவா ரூ.2.20 கோடி ஈட்டியது. ஆனால், விவேகம் படம் ரூ.5.75 கோடி ஈட்டியுள்ளது.

இந்தப் படம் மலேசியாவில் மட்டுமே ரூ8 கோடியும், அமெரிக்காவில் ரூ3 கோடியும் வசூல் செய்துள்ளது என்பது கொசுறு தகவல்.