பாகுபலி சாதனையை விவேகம் படம் முறியடித்ததாக தமிழ் திரையுலக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

2017-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் பாகுபலி திரைப்படத்தின் சாதனையை முறியடித்து விவேகம் திரைப்படம் டாப்பில் உள்ளது

இந்தாண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் பல வசூல் சாதனைகளை நிகழ்த்தியிருந்தது.

இதில் கடந்த மாதம் அஜித் நடிப்பில் சிவா இயக்க்கத்தில் வெளியான விவேகம் திரைப்படம் பாகுபலி திரைப்படத்தின் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து உள்ளதாம்.

வெளியான நான்கு நாட்களிலேயே சுமார் 100 கோடி வசூல் செய்த விவேகம் திரைப்படம், சென்னையில் மட்டும் 8.50 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

இது பாகுபலி திரைப்படத்தின் வசூல் சாதனையை விட அதிகம்.

இதுவரையிலும் விவேகம் திரைப்படம் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது என்பது கொசுறு தகவல்.

இந்தப் படம் எதிர்மறையான கருத்துகளை பெற்ற போதிலும் இவ்வளவு சாதனைகளைப் பெற்றுள்ளது என்பது வியக்க வைக்கிறது.