vivegam collected Rs.120 crore only in the reserved tickets

தல அஜித்தின் விவேகம் படம் முன்பதிவில் மட்டும் ரூ.120 கோடி வசூல் வேட்டையாடி கோலிவுட்டையே தெறிக்கவிட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விவேகம் படம் இன்று ரிலீசாகிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் படத்தின் விமர்சனம் முகநூல், டிவிட்டர் என்று வெளியாகி தெறிக்கவிடப்போகிறது.

இப்படத்தின் முன்பதிவின் வசூல் கோலிவுட்டையே ஆட்டம் காணவைத்துள்ளது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் விவேகம் வெளியீட்டுக்கு முன்பே ரூ.120 கோடி முன்பதிவில் மட்டும் சாதனை படைத்துள்ளது.

மேலும், முதல் வாரத்தில் விவேகம் ரூ.2000 கோடியை தாண்டிவிடுமாம். இப்போவே இது பாகுபாலியை சுண்டெலியாக்கி விட்டது. எதிர்ப்பார்த்தபடி ஒரு வாரத்தில் ரூ.2000 கோடியை எட்டிவிட்டால் பாகுபலி எல்லாம் தூசி போல காற்றில் கரைந்துவிடும்.

ரூ.110 கோடி தயாரிப்பில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

ஆனால், முன்பதிவில் மட்டும் ரூ.120 கோடி வசூல் என்பது தல அஜித்தின் ரேஞ்ச் என்ன என்று காட்டியுள்ளது.

ரசிகர்களின் வரவேற்பைக் கொண்டு இப்படத்தை ஆங்கிலம், ஜப்பான், சீனா ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அப்படி நடந்தால் விவேகம் டிரைலரில் அஜித் சொல்வது போல “வில் சி மை ரேஞ்ச்” என்று அதகளம் பண்ணுவோம்ல…