அதற்கு தகுந்த போல டிரைலரில் ரஜினி பேசும் வசனங்களான ‘அடிச்சு அண்டர்வேரோட ஓட விட்ருவேன், மானம் போச்சுன்னா… திரும்ப வராது.. பாத்துக்கோ’ மற்றும் ‘ எவனுக்காவது பொண்டாட்டி புள்ள செண்ட்டிமெண்ட் இருந்தா… ஓடிப்போயிடு.. கொல காண்டுல இருக்கேன்… கொல்லாம விடமாட்டேன்’ எனும் வசனங்களுக்கு, அடுத்ததாக வந்த விஸ்வாசம் ட்ரைலர் அஜித்  பேசும் ‘ உங்க மேல கொல கோவம் வரணும்… ஆனா உங்கள எனக்குப் புடிச்சுருக்கு… ஊரு தேனி மாவட்டம்… பொண்டாட்டி பேரு நிர்ஞ்சனா… பொன்னு பேரு ஸ்வேதா…முடிஞ்சா ஒத்தைக்கு ஒத்த வாடா’  வசனங்கள் பதிலடி கொடுத்தது.

அடுத்ததாக, பேட்ட படத்திற்கு ஸ்பெஷல் காட்சிகள், ரசிகர் மன்ற காட்சிகள் மிட் நைட் ஷோ என ஆரம்பமே அதிரவிட்டது. ஆனால் பேட்ட படத்திற்கு அப்படி ஒரு வாய்ப்பு அமையல காரணம் படைத்து நீளம் என்று தான் சொல்லணும் ஆனால் அஜித் ரசிகர்களோ ஏகத்துக்கும் ரஜினி அண்ட் பேட்ட டீமை கழுவி ஊத்தினார்கள்.

அடுத்ததாக, படத்தின் முதல் நாள் வசூலில் பேட்டையை அடித்து தூக்கி அந்தரத்தில் தொங்கவிட்டது விஸ்வாசம், இதனால், யாரை யார் கோமணத்தோட ஓடிஏ விடுறது நாங்க உங்க கோமணத்தை அவிழ்த்து ஓடவிடுவோம் தலைவரே என ஏளனமாக சிரித்து மரண கலாய் கலாய்த்தனர்.

அதோடு விட்டார்களா? படத்தின் வசூலை பற்றி அறிவிக்க திருப்பூர் சுப்பு மூலம் இந்த வசூல் விவரத்தை சொல்ல வைத்தது பேட்ட டீம், அங்கேயும் வந்து வைத்தது விஸ்வாசம் கேங் அது என்னன்னா நீங்க 100 கோடின்னா நாங்க என்ன தொக்கா இல்ல பழைய தக்காளி தொக்கா? எண்களோடது  125 கோடிடா அதுவும் வெறும் 8 நாள் என தாறுமாறாக தாளித்து தள்ளியது தல பட கேங்.

இந்நிலையில் படத்தின் 10 வது நாள் ௧௫ ஆம் நாள் போஸ்டர் என ஒட்டிய இடந்து படக்குழுவுக்கும் இந்த போஸ்டருக்குள் சண்டை வந்துள்ளது. அதாவது இரண்டு படங்களுமே 10 ஆம் தேதியே வெளியானது. ஆனால் அதிகப் பிரசங்கித்தனமாக வாய் விட்ட தல பட கேங் ஆர்வக் கோளாறில் 15 வது நாள் கொண்டாட்டம் என போட்டு கொல காண்டில் இருந்த  ரஜினி டீமை வெறுப்பேத்தியது. இன்னும் பொறுத்தால் ஆகாது நம்மகிட்ட வம்பிழுப்பதே இவிங்களுக்கு வேலையா போச்சி ஆமாம்,

10 வது நாள்ன்னு போஸ்டர் போடாம 15 வது நாள்ன்னு போட்டு மக்களை ஏமாத்துறாய்ங்க. என பொங்கியதாம்  ரஜினி கேங். இவ்வளவு நாளாய் கொல காண்டில் மரண வெயிட்டிங்கில் இருந்த ராஜினி ரசிகர்கள். பொய் சொன்னாலும் ஒரு அளவு வேணாமா? அதுக்காக இப்படியா பண்றது? என மீம்ஸ் போட்டு மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.