இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமாகி 5 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரின் நினைவு நாளில் விஸ்வாசம் ட்ரெய்லர் வெளியாகி பெருமை படுத்த உள்ளது.
வீரம், வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
கிராம கலாச்சாரத்தை மையப்படுத்தி குடும்பப்படமாக விஸ்வாசம் தயாராகியுள்ளதாக சிவா ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று மாலை அஜித் ஏர்க்கலப்பையுடன் தோன்றும் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகளும் வயல்களில் படமாக்கப்பட்டிருந்தது. இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமாகி 5 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரின் நினைவு நாளில் விஸ்வாசம் ட்ரெய்லர் வெளியாக இருப்பது, விவசாயம் சார்ந்த கதைக்களமாக படம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இன்று விஸ்வாசம் ட்ரெய்லர் வெளியாவது குறித்து அஜித் ரசிகர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள். இதனால் #ViswasamTrailerFromToday என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகியுள்ளது. நேற்று மாலையிலிருந்து டிவிட்டரில், ட்ரெண்டிங்கில் இருப்பதைப் பார்த்தால் ட்ரெய்லர் வெளியான வேகத்தில் அது மஜ்ஜிந்தய சாதனைகளை முறியடித்து புது சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
