கஜா புயலுக்கு தாமதமாக நிவாரண நிதி கொடுத்தது, குறைவான தொகை கொடுத்தது தொடர்பாக தன் மீது கடுமையான விமர்சனங்கள் கிளம்பி வருவது கண்டு கடுப்பில் இருந்த அஜீத், நேற்று ‘விஸ்வாஸம்’ பட அதிபர் மற்றும் இயக்குநர் மீது எரிந்து விழுந்த செய்தி இண்டஸ்ட்ரியில் தீப்பிடித்துக்கொண்டிருக்கிறது.

தர்போதைக்கு சினிமாவில் பொழுதுபோகாதவர்களின் லேட்டஸ்ட் டாபிக் பொங்கலுக்கு ‘விஸ்வாஸம்’ வரும் ஆனா வராது என்பதுதான். இன்னும் எந்த ஒரு நியூஸ் சேனலும் இது சம்பந்தமான விவாத மேடை அமைக்காததுதான் பாக்கி.

இந்நிலையில் இதற்கு முடிவுகட்ட நினைத்த அஜீத் தயாரிப்பாளரை அழைத்து, ’படம் பொங்கல் ரிலீஸ்தான்னு கன்ஃபர்ம் பண்றதுல என்ன பிரச்சினை? என்று டென்சனாக, தயாரிப்பாளரோ ‘டைரக்டர்தான் ஏற்கனவே ‘வேதாளம்’, வீரம், ‘விவேகம்’ செண்டிமெண்ட் பிரகாரம் வியாழக்கிழமை வெளியிடலாம்னு சொல்லியிருக்கார்’ என்று இழுக்க ,’ வியாழக்கிழமையாவது வெண்டைக்காயாவது, சுண்டைக்காய்ப் பயலுக எல்லாம் நம்ம ரிலீஸைப் பத்தி கிண்டல் பண்றானுங்க. இன்னைக்கே உடனே டீஸரை ரிலீஸ் பண்ணுங்க’ என்று கொந்தளித்ததைத் தொடர்ந்தே நேற்று நள்ளிரவு முறையான முன்னறிவுப்புகள் ஏதுமின்றி தடாலடியாக ரிலீஸ் ஆனதாம்.