அஜித் தொடர்ந்து நான்கு படங்களை இயக்க வாய்ப்பு கொடுத்தும் இப்படியா சொதப்புவது என இயக்குநர் சிறுத்தை சிவாவை சீண்டி  இருப்பார்கள் போல் தெரிகிறது. அதனால் தான் விஸ்வாசத்தை வெற்றி பெற வைக்க இயக்குநர் அட்லியின் வழியை பிடித்து விட்டார் சிறுத்தை சிவா என ஆந்திரவாலாக்கள் அதிர டென்ஷனாகி இருக்கிறார் அஜித்.


  
ரஜியின் பேட்ட படத்தைவிட அஜித்தின் விஸ்வாசம்தான் வசூலை குவித்து வருகிறது. அடுத்தடுத்து இரண்டு படங்கள் தொடர்ந்து அஜித்தை வைத்து ஃபிளாப் கொடுத்தார் இயக்குனர் சிவா. அசராமல் நான்காவது படம் வாய்ப்பும் கொடுத்தார். அப்போதே, அஜித்துக்கு தேவையில்லாத வேலை என மனக்குமுறலை பதிவு செய்தார்கள் அவரது விசிறிகள். 

இப்போ சினிமாவுக்கு வந்த அட்லீ, சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்த படத்தின் கதைகளை உல்ட்டாவாக்கிப் படம் பண்ணும் போது நாம ஏன் அந்த ரூட்டில் பயணிக்கக்கூடாது என நினைத்திருக்கிறார் சிறுத்தை சிவா. அதிகம் அலட்டிக்கொள்ளாமல் பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியான தெலுங்கு படம் ‘துளசி’யை தூசி தட்டி அஜித்தின் தலை தடவி ரசிகர்களுக்கு பொங்கல் பரிசு கொடுத்திருக்கிறார் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. 

துளசி படத்தின் கதை இதுதான்... ‘ஹீரோ வெங்கடேஷின் குடும்பமே வன்முறை விரும்பிகள். காலை உணவுக்கு முன் ஒரு கலாட்டா, மதிய சாப்பாட்டுடன் இரண்டு மோதல்கள்.. இரவு உணவுக்கு முன் இருவரை போட்டுத்தள்ளுவது... என ஊரையே அடக்கி  ஆள்கிறார்கள். அதை முதலில் அறியாத வெங்கடேஷின் காதல் மனைவி, தன் சொந்த அண்ணனே வெங்கடேஷ் குடும்ப விரோதிகளால் கொல்லப்படும்போது கொதித்தெழுகிறார். தங்களது ஒரே ஒரு மகனை அழைத்துக்கொண்டு வேறு ஊருக்கு போய் விடுகிறார்.

புத்திர சோகத்தில் வாடும் வெங்கடேஷ் அவள் இருக்கும் ஊரைத் தேடிவந்து தன் சொந்த மகனிடமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பழகுகிறார். மகனுக்கு ஒரு கொடும் நோய் இருக்கிறது. அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்போகும் நேரத்தில் படம் நெடுக அடிவாங்கிய வில்லன் கூட்டம் மகனை பலிவாங்க வர, அவர்களையும், மனைவியின் மனதையும் ஒருங்கே வெல்கிறார் என்பது தெலுங்கு படத்தின் கதை.

இதைத்தான் விஸ்வாஸமாக சுட்டிருக்கிறார் சிவா. ஆங்காஙே பட்டி, டிங்கரிங் பார்த்திருக்கிறார். மகனுக்கு பதிலாக மகள். ஊரை மும்பையாக்கி இருக்கிறார். இதில் உச்சக்கட்ட காமெடி, அதிலும் நாயகி நயன்தாராவேதான்... அஜித்துக்கு சால்ட் அண்ட் பெப்பரைத் தடவி விஸ்வாசத்தில் துளசி தடவியிருக்கிறார் சிறுத்தை சிவா. இந்த விவகாரம் ஆரம்பத்தில் இருந்தே மீடியாக்களில் கசிந்தது. தாமதமாக அஜித் காதுகளையும் சென்றடைந்துள்ளது. ’’எல்லாம் பாசிட்டிவா போற நேரத்துல இப்படியொரு பேரை நாம சம்பாதிக்கணுமா? எனக் கேட்டு சிவாவிடம் டென்ஷனானதாக தகவல்!