அஜீத் ரசிகர்கள் வெறித்தனமாக எதிர்பார்க்கும் ‘விஸ்வாஸம்’ படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. ஒரு ஆக்‌ஷன் அதிரடி அஜீத் லுக்கை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு குரூப் டான்சர்களுக்கு மத்தியில்  தல’ பைக் ஓட்டிவரும் டிசைன் மிகவும் அப்செட்டை உண்டாக்கியுள்ளது.

சும்மாவே அஜீத் ரசிகர்களை ஓட்டியெடுக்கும் அணில் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா... ‘சர்கார்’ படத்தில் விஜய் ஜம்முன்னு தம்மடிக்கும் டிசைன்களை ‘விஸ்வாஸம்’ டிசைன்களுக்கு அருகில் போட்டு ‘இது கெத்து...இது வெத்து’ என்கிற ரீதியில் வலைதளங்கலில் கலாய்க்க ஆரம்பித்தார்கள். 

சும்மா இருப்பார்களா அஜீத் ரசிகர்கள், ‘அடேய் உங்க ஆளு பொறுப்பில்லாம தம் அடிக்கிறாரு. ஆனா எங்க தல அவ்வளவு பெரிய பைக் ரேஸரா இருந்தாலும் பொறுப்பா ஹெல்மெட் மாட்டி வண்டி ஓட்டுங்கன்னு பொதுமக்களுக்கு புத்திமதி சொல்றாரு’என்று திருப்பி அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பொறுப்பா ஹெல்மெட் மாட்னது ஓகே ஆனா, அதே தல இரண்டு கைகளையும் விட்டுட்டு வண்டி ஓட்ட சொல்றாரே?