கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்... ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்களின் ரிலீஸுக்கு இன்னும் சரியாக இரண்டே வாரங்கள் இருக்கும் நிலையில் ஊடகங்களில் இரு படங்கள் குறித்த செய்திகளும், யூகங்களும் குவிந்து வருகின்றன.

‘விஸ்வாசம்’ படத்தில் அஜீத்துக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடப்பது வரை ஃபர்ஸ்ட் ஹாஃப் . இண்டர்வெல்லில் இருவரும் பிரிந்துவிட அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை. படத்தில் வில்லன்களே கிடையாது. நயன் தாரா வில்லியாக மாறி கிளைமாக்ஸில் திருந்துகிறார் என்றெல்லாம் ஒரு குரூப் கிளப்பிவிட்டுக்கொண்டிருக்க, ‘விஸ்வாசம்’ குறித்த ஒரு ரியல் சர்ப்ரைஸ் நியூஸ் வந்திருக்கிறது.

இதுவரை தமிழ் சினிமா கண்டிராத அதிர்ச்சியாக, குறிப்பாக ரஜினி படங்கள் கூட கண்டிராத அதிர்ச்சியாக ‘விஸ்வாசம்’ முதல்முறையாக ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளிலும் ரிலீஸாகவிருக்கிறது. இத்தகவலை அஜீத் வட்டாரம் ஆரவாரத்துடன் கன்ஃபர்ம் செய்கிறது.

‘பில்லா 2’ படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்ல ஆரம்பித்த அஜீத், அடிக்கடி அந்நாட்டுக்கு விஜயம் செய்துகொண்டே இருந்தார். அதன்மூலம் கிடைத்த தொடர்புகளை இப்போது பட ரிலீஸுக்குப் பயன்படுத்தியதைப் பாராட்டத்தான் வேண்டும்.