கடந்த 10 ஆம் தேதி வெளியான, 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' படங்களை ஒப்பிட்டு பேசி, ரசிகர்கள் துவங்கிய பஞ்சாயத்து இன்னும் முடிந்த பாடில்லை. இருதரப்பு ரசிகர்களும், திரையரங்கில் துவங்கி, சமூக வலைத்தளம், படத்தின் வசூல் என அனைத்திற்கும் மோதிக்கொள்கிறார்கள். மேலும் திரைப்படத்தின் வசூல் பல கோடி என எண்ணிக்கையை உயர்த்தி கொண்டே போகின்றனர்.  

இந்நிலையில் உண்மையில் வசூலில், ஜெயிக்க போவது பேட்டயா? விஸ்வாசமா? என பிரபல ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை சேர்ந்த  விநியோகிஸ்தர் செண்பக மூர்த்தி, பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இது குறித்து அவர் கூறியுள்ளது... "பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான, சூப்பர் ஸ்டாரின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்களின் ஆதரவை பெற்று, தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. 

ஆனால், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தமிழகத்தில்,  ரஜினியின் 'பேட்ட' படத்தை விட அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு வசூல் அதிகம் என கூறப்படுகிறது.

ஆனால், விஸ்வாசம் படம் தற்போது அதிகம் வசூல் செய்ததாக சொல்லிக்கொண்டாலும், இறுதியில் 'பேட்ட' படம் நின்று பேசும் என தமிழகத்தில் பேட்ட படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை சேர்ந்த செண்பகமூர்த்தி கூறியுள்ளார்.

அஜித்தின் விஸ்வாசம் விமர்சன ரீதியாகவும் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றாலும் இறுதியில் பேட்ட படம் தான் வசூல் ரீதியாக ஜெயிக்கும் என அடித்து கூறியுள்ளார்.

மேலும்  இதுவரை நாங்கள் ரிலீஸ் செய்ததிலேயே பேட்ட தான் பெஸ்ட் வசூல் அள்ளிய படம் என கூறியுள்ளார். இப்படி ஒரு தகவலை வெளியிட்டால் சும்மாவா இருப்பார்கள் ரசிகர்கள், வழக்கம் போல் இந்த தகவலை வைரலாக பரப்பும் வேலையில் இறங்கியுள்ளனர்.