அஜித் - நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளதால், இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு இயக்குனர் சிவா பதில் கூறியுள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே, வெற்றிபெற்ற படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுப்பது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில், இதுவரை லாரன்ஸ் நடித்த காஞ்சனா, காஞ்சனா 2 , காஞ்சனா 3 , சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம், சிங்கம் 2 ,சிங்கம் 3 , எம பல பாகங்கள் எடுக்கப்பட்டு வெளியானது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட,  எந்திரன் படத்தை தொடர்ந்து, அந்த படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படத்தை இயக்கி இருந்தார்.  மேலும் 22 ஆண்டுகளுக்கு பின் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் அடுத்த பாகம் எடுக்கப்படுமா? என பல ரசிகர்கள் சமூக வலைதளத்தில் இயக்குனர் சிவாவிடம் கேள்வி ஒன்றை எழுப்பி வந்தனர்.  

இந்த கேள்விக்கு பதில் கொடுக்கும் வகையில், பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் சிவா கூறுகையில்,  உணர்வுபூர்வமான,  கதையை உருவாக்கியதால் தான் 'விஸ்வாசம்' மிகப்பெரிய வெற்றிபெற்றது. எனவே வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக 'விஸ்வாசம்'  படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் கூறியுள்ளார். இந்த பதில் அஜித் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.