அஜித், நயன்தாரா சத்யராஜ், பிரபு, ஜெகபதிபாபு, ராஜ்கிரண் நடிப்பில் சிவா இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸ்  தயாரிப்பில், உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. டிரெய்லரும் வெளியாக உள்ளது.

நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா ‘வீரம்’,‘வேதாளம்’,‘விவேகம்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். அவர் அஜித்துடன் 4-வது முறையாக கூட்டணி சேர்ந்த திரைப்படம் ‘விஸ்வாசம்’. 4 வது முறையும் கூட்டணி சேர்ந்ததால் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு செம்ம எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்த படத்தின் முன்பதிவு பல திரையரங்குகளில் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் இப்படத்திற்கு போட்டியாக பொங்கலுக்கு வெளியாக உள்ள அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டிரைலர் வருகிற புத்தாண்டின் மாலையில் வெளியாக உள்ளதாம்.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வெளியாகவுள்ளது. ரஷ்யாவில்  அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.  இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் ரூ. 13 கோடிக்கு விலைபோனதாம். இது அஜித் படங்களிலேயே அதிகம் என தெரிவிக்கின்றனர். 

அஜித்துடன் நயன்தாரா சத்யராஜ், பிரபு, ஜெகபதிபாபு, ராஜ்கிரண் நடிப்பில் சத்யஜோதி ஃபிலிம்ஸ்  தயாரிப்பில், உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. டிரெய்லரும் வெளியாக உள்ளது.