இன்று அதிகாலையிலிருந்தே வெறித்தனமாக காத்திருந்த தல ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் அளவிற்கு ஒரு அப்டேட்ஸ் கொடுக்க காத்திருந்தது விசுவாசம் படக்குழு.
தல அஜித் நடிப்பில் இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை வரும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் இன்று மாலை 7 மணிக்கு வெளியிட இருப்பதாக விசுவாசம் பட தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. தல படத்தின் அப்டேட்டுக்காக வெறித்தனமாக காத்திருந்த ரசிகர்களுக்கு "அட்ச்சி தூக்கு" என்ற பாடலை வெளியிட உள்ளனர். சிங்கிள் டிராக் குறித்த அறிவிப்பு மோஷன் போஸ்டரை போலவே சத்தமில்லாமல் வெளியாகியிருக்கிறது.
