சிவா இயக்கத்தில்  அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடித்த 'விஸ்வாசம்' டிரைலர் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது. இதற்கு முன்பு வெளிவந்த டிரைலர்களின் சாதனையை இந்த டிரைலர் முறியடித்தது. சுமார் 7 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள், 9 மணி நேரத்தில் 1 கோடி பார்வைகளைக் கடந்தது.

அதன்பின் டிரைலருக்கான பார்வையும், லைக்குகளும் எதிர்பார்த்த அளவிற்கு அதிகமாகவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொண்டு 1 லட்சம் லைக்குளும், கடந்த 24 மணி நேரத்தில் 45 லட்சம் பார்வைகளும்தான் கூடுதலாகக் கிடைத்துள்ளது.  12 லட்சம் லைக்குகள், 15 கோடியே 6 லட்சம் பார்வைகள், 97 ஆயிரம் கமெண்ட்டுகளுடன் இருக்கிறது. 

விஜய்யின் 'சர்கார்' படத்திற்கு வெறும் டீசர் மட்டுமே வெளியாகியது. 'சர்கார்' டீசர் 24 மணி நேரத்தில் 1 கோடியே 60 லட்சம் பார்வைகளைப் பெற்றது. 12 லட்சம் லைக்குகளையும், 1 லட்சம் கமெண்ட்ஸ் வந்துள்ளது. 24 மணி நேரத்தில் சர்காரின் டீசர்/டிரைலர் சாதனையை 'விஸ்வாசம்' டிரைலரால் முறியடிக்க முடியவில்லை.

'விஸ்வாசம்' டிரைலர் 'சர்கார்' சாதனையை சாதாரணமாக முறியடித்துவிடும் என அலட்சியம் காட்டிய அஜித் ரசிகர்களின் நம்பிக்கை பொய்யாகிப் போனது. ஆனாலும், 'விஸ்வாசம்' டிரைலர் தொடர்ந்து யுடியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.  

ஆனால், விஸ்வாசம், கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியான பேட்ட டிரைலரின் சாதனையை முறியடித்தது. 24மணிநேரத்தில் பேட்ட டிரைலர் 1.10 கோடி பார்வைகளும், 5 லட்சம் லைக்குகளையும் கடந்தது. தற்போது வரை  அந்த டிரைலருக்கு 1.54 கோடி பார்வைகளும், 6.40 லைக்குகளும் கிடைத்தன. பேட்ட பட டிரெய்லரின் நான்கு நாள் சாதனையை விஸ்வாசம் இரண்டு நாட்களில் முறியடித்திருக்கிறது.