வசூலில் கொல மாஸ் காட்டிய விஸ்வாசம் சாதனை... அதிகாரபூர்வமாக அதிரவிட்ட கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ்!
அஜித் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி ரிலீஸ் ஆன விஸ்வாசம் வசூலில் புதிய சாதனை படைத்திருப்பதை இப்படத்தை ரிலீஸ் செய்த "கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம்" அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாரான ரஜினியின் பேட்ட, தல அஜித் நடிப்பில் உருவாகி இருந்த விஸ்வாசம் திரைப்படம் கடந்த ஜனவரி 10-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.
சுமார் 27 ஆண்டுகளுக்குப்பின் ரஜினியின் வசூலை முறியடித்த விஸ்வாசம் படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் விதமாக இப்படம் உருவாகி இருப்பதால் ரசிகர்கள் பலரும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். தமிழத்தில் மட்டுமல்ல தமிழகம் மட்டுமல்ல கர்நாடக,கேரளா என இன்று வரை அனைத்து தியேட்டர்களிலும் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இப்படம் வசூலிலும் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.
#Viswasam125CroresVettai - Angali pangali ooda aadharavula #Viswasam has crossed 125 crores gross in TAMIL NADU alone by the end of today! Thank you makkaley 🙏#Thala #Ajith #Nayanthara @SathyaJyothi_ @directorsiva @immancomposer @DoneChannel1 @SureshChandraa pic.twitter.com/ziZV1RAZzv
— KJR Studios (@kjr_studios) January 17, 2019
படம் வெளியான நாளிலிருந்து படத்தின் வசூல் பற்றி பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வந்த நிலையில், படம் ரிலீஸ் ஆகி வெறும் 8 நாளில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 125 கோடி வசூல் செய்து விட்டதாக படத்தை ரிலீஸ் செய்த கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை தல ரசிகர்கள் #Viswasam125CroresVettai என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.