தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாகிய அஜித் மற்றும்   ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த படங்களான விஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ஒரே நாளில் மோதியது.

சென்னை சிட்டியில் பேட்ட அதிகமான திரையரங்கில் ரிலீஸ் ஆனது, செங்கல்பட்டு பகுதியில்  பேட்ட படத்தை விட "விஸ்வாசம்" அதிகமான தியேட்டர்களில் வெளியாகி இருந்தது. அதேபோல தமிழகத்தின் பல இடங்களில் அதிக தியேட்டர்களில் "விஸ்வாசம்" தான் ரிலீசானது.

படம் வெளியான முதல் வாரத்திலிருந்து  சென்னை வசூலில் பேட்ட படம் முதலிடத்தையும், தமிழக வசூலில் பொறுத்தவரை விஸ்வாசம் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில், பேட்ட விஸ்வாசம்  ரிலீசாகி 25 நாட்கள் முடிவடைந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பேட்ட – ரூ 14.92 கோடியும், விஸ்வாசம் 12. 41 கோடி  வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.