அஜீத்தின் விஸ்(சு)வாசம் படம் பொங்கலன்று வெளியாக இருக்கிறது. இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக கைகோர்த்துள்ளார் அஜீத்.
கடந்த மே மாதம் ஆரம்பித்த படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்-தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இப்படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியானது. இமான் தான் படத்தின் இசையமைப்பாளர். ஆடியோ வெளியீட்டின் போது விஸ்வாசம் படத்தின் தீம் மியூசிக்கும் வெளியானது. தீம் மியூசிக்கை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே என்று இசை ஆர்வலர்கள் தேடிப் பார்க்க, கடைசியில் அது அர்ஜூன் நடித்து 2007ல் வெளியான மருதமலையின் தீம் மியூசிக் போலவே இருக்கிறது என்று கண்டுபிடித்தார்கள்.

இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மருதமலை படத்தின் இசையமைப்பாளரும் இமானே தான்.  தனது படத்தின் இசையையே மறு காப்பி மற்றும் உல்ட்டா செய்து அடித்து விட்டிருக்கிறார் விஸ்வாசமில்லா இமான் விஸ்வாசத்திற்கு.