விசுவாசம் படத்தில் நடிக்கும் நயன்தாராவின் கேரக்டர் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. அஜித் கிராமத்து வேடத்தில் நடித்து வருவதால் 

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடித்து வரும் திரைப்படம் 'விசுவாசம்'.  இந்த படத்தில் அஜித் கிராமத்து வேடத்தில் நடித்து வருவதால் இந்த படத்தில்  மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

விசுவாசம் படத்தில்  அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்தது தான், ஆனால் அவர் கேரக்ட்டரின் பெயர் குறித்து தான் ஏகப்பட்ட குழப்பம் நிலவி வருகிறது. 

சமீபத்தில் தான் நயன்தாரா அவருடைய ட்விட்டர் பக்கத்தில், அஜித்துடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் அந்த புகைப்படம் வைரலாக பரவிய நிலையில் தற்போது விசுவாசம் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

அதாவது விஸ்வாசம் படத்தில் நடிக்கும் நயன்தாராவின் கேரக்டர் பெயர் நிரஞ்சனா என்று தெரிய வந்துள்ளது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதுவரை டீசர், டிரைலர் என எதுமே வெளியிடப்படாத இப்படத்தின் இரண்டு போஸ்டர்களும் ஒரு மோஷன் போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.