தமிழ் திரையுலகில் குடும்ப சென்டிமெண்டை வைத்து இப்படி எல்லாம் கூட தினுசு, தினுசாக திரைக்கதை அமைத்து படம் இயக்கலாம் என காட்டியவர் பழம் பெரும் இயக்குநர் விசு. இவரது படங்களை பார்ப்பதற்கு என தனி ரசிகைகள் பட்டாளமே உண்டு. அப்படிப்பட்ட நடிகரும், இயக்குநருமான விசு கடந்த மார்ச் மாதம் காலமானார். இந்நிலையில் விசு இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது 

 

இதையும் படிங்க: காதல் கணவருக்கு லிப் லாக்... படு ரொமான்ஸ் போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்...!

விசு இயக்கி நடித்து 1986ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’. வசூல் ரீதியாக மட்டுமல்லாது தேசிய விருது, பிலிம் பேர் விருதுகளையும் குவித்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விசுவின் சிஷ்யனான வி.எல்‌.பாஸ்கர்ராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், இயக்குனர்‌ விசு எழுதி இயக்கிய ஏவிஎம்‌ சம்சாரம்‌ அது மின்சாரம்‌: தேசிய விருது பெற்ற மாபெரும்‌ வெற்றி படம்‌. நீண்ட இடைவெளிக்கு பிறகு மறைந்த இயக்குனர்‌ விசு அவர்கள்‌ கடைசியாக கதை திரைக்கதை வசனம்‌ எழுதியுள்ள சம்சாரம்‌ அது மின்சாரம்‌ 2' அவரின்‌ லட்சிய படைப்பு. 

இப்படத்தை “மக்கள்‌ அரசன்‌ பிக்சர்ஸ்‌” நிறுவனர்‌ திரு.ராஜா அவர்கள்‌ தயாரிக்கிறார்‌. இந்நிறுவனம்‌ விமல்‌ நடிக்கும்‌ “எங்கள்‌ பாட்டன்‌ சொத்து”, விதார்த்‌, யோகிபாபு நடிக்கும்‌ “உலகமகா உத்தமர்கள்‌”, பா.விஜய்‌ இயக்கத்தில்‌ ஜீவா அர்ஜுன்‌ நடிக்கும்‌ “மேதாவி” போன்ற படங்களை தயாரித்து வருகிறது. சம்சாரம்‌ அது மின்சாரம்‌ - 2 திரைப்படத்தை விசுவின்‌ சிஷ்யன்‌ வி.எல்‌.பாஸ்கர்ராஜ்‌ இயக்குகிறார்‌. இவர்‌ ராஜ்‌ டிவியில்‌ அகடவிகடம்‌ நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்‌. இந்த படத்திற்கு பரத்வாஜ் இசையும், பா விஜய் பாடல்களும்ம், ராஜவேல் மோகன் ஒளிப்பதிவும், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர். 

 

இதையும் படிங்க: ‘லோ நெக்’ உடையில் படுமோசமாக போஸ் கொடுத்த நிவேதா தாமஸ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

மேலும் இந்த படத்தின் உதவி வசனகர்த்தாவாக விசுவின்‌ மகள்‌ லாவண்யா விசு பணியாற்றுகிறார்‌. இதில்‌ முக்கிய கதாபாத்திரத்தில்‌ நடிக்க திரு.ராஜ்கிரண்‌ வசம்‌ பேசப்படுகிறது. மற்ற நட்சத்திர தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. “சம்சாரம்‌ அது மின்சாரம்‌ - 2: திரைப்படத்தின்‌ கதையை பற்றி இயக்குனர்‌ பாஸ்கர்ராஜ்‌ கூறுகையில்‌, ‘இது சிறுவர்கள்‌, இளைஞர்கள்‌, பெரியவர்கள்‌, அனைவரும்‌ ரசிக்ககூடிய கதம்பமான ஒரு குடும்ப கதை. அனைத்து தரப்பட்ட மக்களையும்‌ திரையரங்கு நோக்கி வரவழைக்கும்‌ இன்றைய சூழலுக்கு ஏற்ற கதை’ என்று கூறியுள்ளார்.